நம்ம லேடி சூப்பர் ஸ்டார் குறித்து டிடி என்ன கூறினார் தெரியுமா.!
சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தமிழில் பவர் பாண்டி, நளதமயந்தி, விசில் , சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார்.