வலிமை படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா..?
அஜித் நடிக்கும் வலிமை படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமை த்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது மொத்தமாக வலிமை படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.