குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இதெல்லாம் தெரிஞ்சி வச்சுக்கோங்க

Default Image

குழந்தைகள் என்பவர்கள் மிகவும் சுட்டித்தனம் மிக்கவர்கள் அவர்களை நாம் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு எது நல்லது ,எது கேட்டது என தெரியாது.

சிறு குழந்தைகள்  இருக்கும் வீடுகளில் சில விஷயங்களை நாம் கவனமாக கடை பிடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு நாம் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்களுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.எனவே அவர்களின் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை:

நமது வீட்டில் உள்ள குழந்தைகள் சிறு பருவத்தில் இருந்து அவர்கள் அறியாமல் செய்யும் சில பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே அந்த பிரச்னைகளில் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

மின்சார பொருள்களில் கவனம் தேவை:

 

குழந்தைகள் உள்ள வீடுகளில் மின்சாரேம் சார்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இதில் வைக்க வேண்டும். அதாவது சுவிட்ச் களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில்  வைப்பது மிகவும் நல்லது.

டிவி குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில்  வைப்பது மிகவும் நல்லது.செல்போன்களை சார்ஜில் போட்டால் கவனமாக பார்த்து எடுத்து விட்டு சார்ஜரை உடனே கழட்டி விடுவது மிகவும் நல்லது. இதனை குழந்தைகளுக்கு இடத்தை இடத்தில வைக்க வேண்டும்.

வீட்டை சுத்தமாக வைத்தல் :

 

குழந்தைகள் இருக்கும் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ளுவது மிகவும் நல்லது.இதனால் நமது வீட்டில் பூச்சி மற்றும் பூரான் முதலிய கொடிய விஷ பூச்சிகளிடமிருந்து குழந்தையை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

வீட்டில் பாதுகாப்பு :

வீட்டில் உள்ள படிக்கட்டுகளின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும், மொட்டைமாடிகளின்  நுழைவாயில்களிலும் பாதுகாப்புக்கதவுகளை வையுங்கள்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வாசலில் உள்ள திரைச்சீலைகளில் உள்ள கயிறுகளின்  நீளத்தை விடக் குறைவாக வைப்பதன் மூலம், குழந்தைகள் அதனை பிடிக்க மாட்டார்கள். இவ்வாறு கயிறுகளை  நீளமாக வைத்து  இருந்தால் குழந்தைகள் அதனை பிடித்து இழுத்து சிலசமயங்களில் அவர்களின் கழுத்து பகுதியில் சுற்றி கொண்டு விளையாடலாம்.

 பொருட்களை எட்டாத இடத்தில் வைத்தல்:

 

கூர்மையான கத்தி, ஊசி ,பிளேடு முதலிய கூர்மையான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைப்பது மிகவும் நல்லது. இரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில வைப்பது மிகவும் நல்லது.மேலும் சிறிய பொருட்களை குழந்தைகளின் அருகில் வைப்பதால் அவற்றை குழந்தைகள்  வாயில் போட்டு  விழுங்கி விடுவார்கள்.

இரசாயன பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை குழந்தைகளுக்கு அருகில் நாம் வைத்து விடுவதால் அவர்கள் சில சமயங்களில் அதனை எடுத்து குடித்து விடுவார்கள்.எனவே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் இந்த பொருட்களை வைப்பது மிகவும் நல்லது.

குளியலறை:

 

குளியறையில் குழந்தைகளை குளிக்க வைக்கும் பொது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களை நம்முடைய கண்காணிப்பில் குளிக்க வைப்பது சிறந்தது. குழந்தைகளின் அருகில் சோப்பு ,ஷாம்பூ முதலிய பொருட்களை எட்டாத இடத்தில வைப்பது மிகவும் நல்லது.

குளியலறையில் அவர்களின் விளையாட்டு போக்கான குணத்தால் பல விபத்துகள் நேரிடலாம் எனவே குழந்தைகளை குளிக்க வைக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்