நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு உணவு இல்லை..! என கூறிய இந்திய ஓட்டலுக்கு அபராதம்..!

Default Image

அயர்லாந்தில் டர்பன் என்ற நகரில் ரவிஸ் கிச்சன் என்ற இந்திய உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் இந்திய உணவுக்கு பெயர் போனது.இந்த ஹோட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் தன்னுடன் வேலை செய்யும் இரண்டு பேருடன் சென்று உள்ளார்.

Image result for Ireland Ravis Kitchen

அப்போது இவர்கள் டேபிளுக்கு சர்வர்கள் யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. நீண்டநேரமாக சர்வர்கள் யாரும் வராததால் அருகில் இருந்த பெண் சர்வரிடம்  ஏன் எங்களிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லை என மயங்க் பட்நாகர் கேட்டார்.

Image result for Ireland Ravis Kitchen

அதற்க்கு அந்த பெண் சர்வர் “நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு உணவு கொடுப்பது இல்லை ”  என கூறினார்.பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேறி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் சென்ற வருடம் நடந்தது.

இந்த வழக்குக்கு சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் உணவு கொடுக்காத அந்த ஹோட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த  அபராத தொகையை மயங்க் பட்நாகருக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்