நீங்கள் செய்தது சரியா ? பாக் பெண் கேட்ட கேள்விக்கு பிரியங்கா அசத்தல் பதிலடி!

Default Image

நடிகை பிரியங்கா சோப்ரா இவர் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில்  பார்வையாளராக இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.

அப்பெண் கூறுகையில் , பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய இராணுவம் அழித்ததை வாழ்த்தியும் , இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக பேசியதை அப்பெண் சுட்டிகாட்டினர்.

உங்களையும் , உங்களது அனைத்து படத்தையும் ரசித்து வருகிறோம். யுனிசெப் நல்லேண்ண தூதரக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? நீங்கள் செய்தது சரியா ?  என அப்பெண் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா , எனக்கு பாகிஸ்தானில் அதிகமாக நண்பர்கள் உள்ளனர்.எனக்கு தேசபக்தி உள்ளது.நான் போரை தூண்டவில்லை. என்னை நேசித்து கொண்டு இருப்பவர்கள் மனம் காயப்பட்டு இருந்தால் நான் வருந்துகிறேன்.இங்கு நாம் அன்பு செலுத்தவே இருக்கிறோம் .இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நன்றி என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்