1-ம் தேதி முதல் இந்த போன்களில் நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது.! திடுக்கிடும் அறிவிப்பு.!

Default Image
  • வாட்ஸ்அப் நிறுவனம்  அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் இந்த சாதனங்களுக்கு வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது புது அப்டேட்டுகளை சமீப காலமாக கொண்டுவருகிறது. இதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த  ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது.

பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்கு பிறகு, அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களையும், iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்கள் பயன்படுத்தும் பயனர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதனால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ளவும் எனவும் குறிப்பிடப்படுகிறது. அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் புதிய கணக்குகளை உருவாக்குவதிலிருந்தோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்ப்பதிலிருந்தோ வாட்ஸ்அப் ஏற்கனவே தடை விதித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.

மேலும் அண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்கள் இனி புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய கணக்குகளை தொடரவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விண்டோஸ் போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது. அதுபோன்று விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. மேலும் KaiOS 2.5.1 பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ் ஆப் சேவை தடையின்றி செயல்படும் என்று தெரிவித்துள்ளது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, செய்தியிடல் தளம் iOS 9 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களையும், Android OS 4.0.3 மற்றும் புதியவற்றையும் பரிந்துரைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்