முகப்பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீங்க இதை மட்டும் செய்து பாருங்க …!!!
இளம் தலைமுறையினரை பாதிக்கக்கூடிய மிக பெரிய சரும பிரச்சனை என்றால் அது முகப்பரு தான். இன்றைய வாலிப சமுதாயம் முகப்பருக்களை நீக்க பல புதுவகை கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இந்த கிரீம்களை பயன்படுத்தும் போது நமது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
முகத்தில் பருக்களால் ஏற்படும் தழும்புகள் மாறாமல் அது முகத்தின் அழகை கெடுப்பதோடு, சரும ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. எனவே இந்த கரும்புள்ளிகள் நீங்க இயற்கையான முறையில் தீர்வு காண இது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
இயற்கை வழிமுறைகள் :
வெந்தயம் :
வெந்தயத்தை நன்கு அரைத்து மாஸ்க் போன்று முகத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் வெந்தயத்தை நன்கு கொதிக்க வைத்து பின் அதை எடுத்து அரைத்து, கரும்புள்ளி இருக்கும் இடத்தில பூசி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பன்னீர் :
பன்னீருடன் சந்தனத்தை பேஸ்ட் போல் அரைத்து ஒரு மணி நேரம் முகத்தில் பூசி, பின் முகத்தை கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயில் :
ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, மீண்டும் பருக்கள் தோன்றாதவாறு தடுக்கிறது.
எலுமிச்சை :
பஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.