வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும்…! சீனா அரசு அதிரடி…!
சீனாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழுகிறது. அந்தவகையில் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். தங்களது அதிகமான நேரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இணையதளங்களில் தான் செலவிடுகின்றனர்.
தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் வண்ணம் சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாகவும், குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் அதிகமான நேரத்தை ஆன்லைனில் விளையாட்டில் செலவிடுவதாகவும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதனை தடுக்கும் வண்ணம் நாளை முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.