இனிமேல் வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 400 மில்லியன் பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம்(NPCI) ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து , 20 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் உடைய ஒரு நபர் வாட்ஸ்அப் வழியாகவே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்த வாட்ஸ்அப் பே இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும், 10 பிராந்திய இந்திய மொழிகளில் கிடைக்கும் இந்த அம்சத்தை பயன்படுத்த UPI முறையை ஆதரிக்கும் வங்கியுடன் டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.