மதிய நேரத்தில் ஏதாவது குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம் தான். ஆனால், பிஸியான சமயங்களில் பசி எடுத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதற்கு பதிலாக, அட்டகாசமான சுவை கொண்ட உருளைக்கிழங்கு சாதத்தை செய்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தாளிப்பு : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு நெய்யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கலவை : வெங்காய கலவையில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு அவிய விட வேண்டும். பின் பின் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கிழங்கு நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
சாதம் : இவற்றில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழையை சேர்த்து இந்தக் கலவையை இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…