பிரீஸ் டாஸ்குக்காக இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் ரம்யாவிடம் பேசுகையில், இந்த வாரம் நீ எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டால் அதற்கு காரணம் நீ கிடையாது என அவரது சகோதரர் கூறுகிறார்.
கடந்த 85 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் அண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார்கள். இந்நிலையில், இன்று ரம்யா பாண்டியன் அவர்களின் தாயார் மற்றும் சகோதரன் வந்துள்ளார்கள். அம்மா வந்ததும் கட்டியணைத்த ரம்யா அழுவார் என எதிர்பார்த்தாலும் அவர் அழவே இல்லை.
அது குறித்த அவரது அம்மாவே வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடம் கூறுகையில், அவள் அழ கூடிய குணம் கொண்டவள் கிடையாது என கூறியுள்ளார். காருக்கு சோம், ஆமா அழமாட்டாங்க, அழ வைப்பாங்க என நக்கலாக கூறுகிறார். அதன்பின் அனைவருக்கும் ராமாயாவின் அம்மா வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். அதன்பின் ரம்யாவுடன் பேசிய அவரது தாயார் மற்றும் சகோதரன் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாய் என்றால் அதற்கு காரணம் நீ கிடையாது என தைரியம் கூறுகின்றனர். இதனால் ரம்யா அப்போ நான் வெளியே வரக் கூடிய சூழ்நிலை இருக்குதா? என கேட்கிறார். இதோ அந்த வீடியோ,
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…