தகுதி இல்லாத போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்ற ரசிகர்கள் தான் என ரசிகர் ஒருவரின் பதிவுக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவராக கலந்துகொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியேறியவர் தான் அனிதா சம்பத். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது எந்த ஒரு பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது, தனக்கென்று ஒரு விளையாட்டு விளையாடுவது என சிறப்பாகத்தான் விளையாடி வந்தார். இந்நிலையில் ஆரிக்கு தற்பொழுது ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். தாய்மை குறித்து தவறாக பேசியதாக அண்மையில் ஆரிக்கு எதிராக பேசிய சம்யுக்தா, ஆரியுவுடன் நேருக்கு நேர் மோதிய அர்ச்சனா, தனது கோபத்தை ஆரியிடம் வெளிப்படுத்திய அனிதா ஆகிய மூவருமே அடுத்தடுத்து வெளியேறியுள்ளது ஆரியின் ரசிகர்களால் தான் என அவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் அனிதா குறித்து ஆரியின் ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆரி ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் அதை நிறைவேற்றி விடுவார்கள்.
அதாவது உங்களின் வெளியேற்றத்தை போல என கமெண்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அனிதா, ஆரியை எதிர்த்து பேசுபவர்களை வெளியே அனுப்புவோம் என்பது வாக்களிக்கும் உங்களுக்கு அசிங்கம் தான். சரியாக விளையாட்டை விளையாடாதவர்களை தான் வெளியே அனுப்ப வேண்டும். அதுதான் உண்மையான பிக்பாஸ் ஓட்டிங் முறை. தற்பொழுது வரை தகுதி இல்லாதவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்றவர்கள் தான். இது பெருமை கிடையாது, இதை கேட்டால் ஆரி வருத்தப்பட தான் செய்வார் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…