இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கல்யாணம் செய்ய தயார் இல்லை.!
இக்கட்டுரையில், நீங்கள் திருமணத்திற்குத் தயாராக இல்லை என்பதற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் தற்போது உங்களது துணையை தேடிக்கொண்டுருக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் காதலித்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அல்லது அவளை திருமணம் செய்து கொள்வது குறித்து சந்தேகம் கொள்கிறீர்களா..? உண்மையில், இந்த கேள்வி உங்களுக்குள் தோணலாம். இல்லையென்றால் குடும்பத்தின் சூழ்நிலை அல்லது நீங்களே அவசரமாக திருமணத்திற்கு ‘ஆம்’ என்று சொல்லியிருக்கலாம்.
திருமணத்தை கண்டு பயம்:
ஆண்களோ, பெண்களோ உங்களது நண்பர்கள் திருமணம் அல்லது உங்கள் உறவினர் திருமணம் செய்ய போகிறார்கள் என்பதை அறிந்த்தும் நீங்கள் சந்தோசமாக இருக்கலாம். அதே நேரத்தில், திருமணத்தை ரசிப்பதற்கும் ஏராளமான நினைவுகளை உருவாக்குவதற்கும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது பயமாகவும் அதிர்ச்சியாகவும் உணரலாம். இது எல்லாருடைய இயல்பு.
திருமணத்தில் சலிப்பு:
இது உங்கள் திருமணத்தைப் பற்றி பயமட்டுமில்லாமல், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி கூறுகிறது. உங்கள் வாழ்நாள் முழுவதையும் துணையுடன் வாழ்வது உங்களுக்கு மிகவும் சலிப்பாக இருக்கிறதா..? எனில், நீங்கள் திருமணம் செய்து கொள்ள இன்னும் தயாராக இல்லை என்பதற்கான அறிகுறிகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
பெற்றோராக விருப்பம் இல்லை:
நீங்கள் திருமணம் செய்து கொண்டவுடன், நீங்கள் விரைவில் ஒரு குழந்தைக்கு பெற்றோராக என்பது உண்மை. நீங்கள் அவர்களைக் கவனித்து கொண்டு பெற்றோரின் ஒவ்வொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இது உங்களை பயமுறுத்துகிறதா…? ஒரு குழந்தையை பெற்று நீங்கள் பெற்றோராக விரும்பவில்லையா….? இதுவும் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்பதை இது காட்டுகிறது.
முடிவு:
உங்கள் துணையுடன் பேசுவது உங்களை ஒருபோதும் இந்த பயங்கரமான சூழ்நிலையில் தள்ளாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.