யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் படத்தினை வரும் ஜூலை 10ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் ஒன்று ‘காக்டெய்ல்’. யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான முருகன் இயக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரான பி. ஜி. முத்தையா தயாரித்துள்ள இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, சாமிநாதன், ரமேஷ், மிதுன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமின்றி காக்டெய்ல் என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கடந்த மார்ச் 20ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்றுள்ள நிலையில் ரிலீஸ்க்கு தயாராக இருந்த படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி வருகிறது. சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படமும் Zee5 ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது இந்த நிலையில் தற்போது யோகிபாபுவின் காக்டெய்ல் படத்தையும் ஓடிடியில் வரும் ஜூலை 10ம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…