தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம்வருபவர் யோகி பாபு இவர் திடீரென வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சினிமா உலகை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் யாருக்கும் யோகியின் திருமணம் குறித்து தெரியாது.ஏன் நீங்க எங்ககிட்ட இத சொல்லல என்று ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகர் யோகி பாபு இத்திருமணம் குறித்து விளக்க அளித்ததுள்ளார்
அதில் எதிர்பாராத சில குடும்ப சூழல் காரணமாக நான் அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.அதனால் தான் யாருக்கும் முறைப்படி அழைக்க மற்றும் உங்களுடைய வாழ்த்துக்களை பெற முடியாமனல் போனது என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
இது குறித்து அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை சற்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத சில சந்தர்ப்பங்கள் அதனால் அந்த சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.என்ன முடிவு எடுப்பது என குழப்பமான நிலையில் தான் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் அமர்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம்.
இவ்வாறு கோபம் இருந்தாலும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து மற்றும் அனைத்து சமூகவலைதளங்களிலும் என் திருமண படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரின் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மார்ச் மாதம் என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது அதற்கு அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெறுவேன் விரைவில் நாம் சந்திப்போம் என்று உருக்கத்தோடு தெரிவித்தார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…