காவி ஆவி நடுவுல தேவி படத்தில் யோகிபாபு இத்தனை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் யோகி பாபு கோலிவுட் சினிமாவில் இன்றிமையாமையாத காமெடி நடிகராக மாறி விட்டார்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு தற்போது “தர்ம பிரபு” படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து இவர் தற்போது அறிமுக இயக்குநர் புகழ் மணி இயக்கத்தில் “காவி ஆவி நடுவுல தேவி” படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இந்த படத்தில் நாயகனாக ராம் சுந்தர் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.
இந்த படம் மிக சிறந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு காதலர்களை சேர்த்து வைக்க 11 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஸ்ரீ காந்த் தேவா இடம் அமைத்துள்ளார்.இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.