கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யோகி. இவர் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி யோகி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்த யோகி மற்றும் சவுந்தர்யா, கல்லூரி ரி-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்த யோகிக்கு காதல் மலர்ந்ததாம். ஆனால் தனது காதலை அப்போது வெளிப்படுத்தாத யோகி ஊரடங்கு காலத்தில் தனது காதலை சவுந்தர்யாவிடம் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது யோகியின் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…