யோகி பாபுவின் மண்டேலா படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ,காமெடியனாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு.அவ்வாறு அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று மண்டேலா.மடோனா அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார்.சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார் .
இந்த படத்தில் யோகி பாபு முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது இந்த திரைப்படம் ஓடிடியிலும் , தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே சசிகாந்த் தயாரித்த ஏலே திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸானதை அடுத்து அவர் தயாரித்துள்ள யோகி பாபுவின் மண்டேலே படத்தினையும் விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தினை மார்ச் மாத இறுதியில் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…