யோகிபாபுவின் 4 படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆகவுள்ளது..!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் யோகிபாபு மக்கள் மனத்தில் நீங்காயிடம் பிடித்துள்ளார். தற்போது தமிழ சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி வருகிறார்.
இவர் விஜய், ரஜினி மற்றும் அஜித் உடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், வருகின்ற அக்டோபர் 11ம் தேதி யோகிபாபு காமெடியனாக நடித்துள்ள 4 முக்கிய படங்கள் திரைக்கு வெளியாகவுள்ளது. “பெட்ரோமாக்ஸ்”, “இருட்டு”, “பப்பி”, “பட்லர்பாபு” போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. யோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரேநாளில் வெளியாகிறது.