தளபதி 65 படத்தில் இணைந்த யோகி பாபு..!!

தளபதி 65 படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கடந்த சில நாட்களிற்கு முன்பு நடைபெற்றது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. ஆம், சமீபத்தில் யோகி பாபு ஒரு பேட்டியில் இதை உறுதி படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தளபதி 65 திரைப்படம் மிகவும் அருமையான படமாக இருக்கும். செம ஜாலியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025