இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய காட்சி ஒன்று கூட வரவில்லை .
இதனால் சிலர் யோகிவின் காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக கட் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறினார்கள். மேலும், சமூக வலைத்தளத்தில் படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே நீக்கி உள்ளதாகவும் யோகி பாபுவின் சம்பளம் மற்றும் கால் ஷீட் பிரச்சனை காரணமாகவே இதை செய்திருக்கலாம் என தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையில், யோகி பாபு நடித்த அனைத்து காட்சிகளையும் நிக்கியிருந்தாலும் யோகி பாபு வரும் ஒரே ஒரு காட்சியை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, படத்தின் ஓப்பனிங் பாடலான நாங்க வேற மாறி பாடலில் அஜித் ஆடிக்கொண்டு இருக்கும்போது பின்னால் கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டு இருக்கிறார் யோகி பாபு. அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இஃதொப்ப இதோ அந்த புகைப்படம்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…