கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பன் படத்தில் ரோபாவாக யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.அதனை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
‘கூகுள் குட்டப்பன்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் , ஹீரோவாக பிக்பாஸ் தர்ஷனும், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியாவும் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . மேலும் இந்த படத்தினை கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,ராகுல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் பிரபலங்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் சூரஜ் வெஞ்சாராமூடு நடித்த அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்க உள்ளதாகவும் ,அவரது மகனாக தர்ஷன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.அதே போன்று படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அந்த ரோபோ கேரக்டரில் யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இது யோகி பாபுவின் புது முயற்சி என்பதும் ,இது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…