யோகாவின் படிநிலைகள்! நாம் செய்யும் யோகா எந்த நிலையில் உள்ளது?!
யோகா என்பது ஒரு லத்திய மொழி சொல். இந்த சொல்லுக்கான அர்த்தம் கிட்டத்தட்ட பொருந்தி போகும் தமிழ் வார்த்தை இணைத்தல் ஆகும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தவே இந்த யோகா பயிற்சியை முன்னோர்கள் கடைபிடித்தனர். யோகா என்பது நோயை தீர்க்கும் மருந்து இல்லை. நோய் நம் உடலுக்குள் புகாமல் இருக்க உடலையும் மனதையும் வலுப்படுத்தவே யோகா.
யோகா என்பது ஆசனமும், மூச்சுப்பயிற்சியும் செய்யும் செயல் இல்லை. இந்த யோகா மொத்தம் 9 வகையாக உள்ளது. அவை, கர்ம யோகா, பக்தி யோகா, ஞான யோகா, ராஜ யோகா, கத யோகா, மந்தர யோகா, தந்திர யோகா, யந்த்ர யோகா, குண்டலினி யோகா என கூறப்படுகிறது.
இவற்றில், கர்ம யோகா செயல் மூலமும், பக்தி யோகா தெய்வீக சிந்தனையின் மூலமும், ஞான யோகா நம் அறிவின் மூலமும், ராஜ யோகம் புத்தி கூர்மையோடும், கத யோக மூச்சுப்பயிற்சி மூலமும், மந்திர யோகா சத்தத்தின் மூலமும், தந்த்ர யோகா நாம் சொல்லும் மந்திரங்கள் மூலமும், யந்திர யோகா என்பது மந்திர தந்திரங்கள் மூலமும் அடைவது ஆகும். குண்டலினி என்பது இவை அத்தனையும் தாண்டி நம் உடலில் இருக்கும் சக்தியை எழுப்புவதாகும்.
இவற்றில் நாம் தற்போது கடைபிடித்து வருவது கத யோகா எனப்படும் ஆசனம் மூச்சு பயிற்சி மட்டுமே!