ஏமனில் வான்வழி தாக்குதல் – ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழப்பு…!
ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டின் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியான பதில் தாக்குதல்களையும் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் பாதுகாப்பு படையினர் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் இராணுவ தரப்பில் இருந்து பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது ஹவுதி அமைப்பினர் 28 பேரும், ஏமன் இராணுவத்தினர் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.