மஞ்சள் நிற பென்குயின் – உலகிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட புகைப்படம்!
உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது. அண்டார்டிகாவின் தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில் இரண்டு மாதம் புகைப்பட சுற்றுப்பயணம் சென்ற புகைப்பட ஆர்வலர் குழுவினர் அங்கு லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதன்பின் அங்கு இருந்த மஞ்சள் நிற பென்குயின்களை கண்டு ஆச்சரியமடைந்ததுடன், அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பலரையும் இந்த புகைப்படம் கவர்ந்து வருகிறது. அண்மையில் வெள்ளை நிற பெண் குயின் கண்டறியப்பட்டது. இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிறப் பென்குயின்கள் தங்கள் துணையை ஈர்க்க அவைகளால் உடலுக்குள் உருவாக்கப்பட்ட மாற்றங்களின் ஒன்றாக இருக்கலாம் என பறவை ஆர்வலர்களால் கூறப்படுகிறது. ஆனால் இது தங்கள் துணையை மட்டுமல்லாமல் தற்போது மனித இனத்தையும் கவர்ந்துள்ளது.