மக்கள் செல்வனுக்கு வில்லனாக களமிறங்கும் தடம் இயக்குனர்! யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்டேட்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, மாமனிதன், கடைசி விவசாயி, கே/பெ ரணசிங்கம், லாபம் , துக்ளக் என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன.
இப்படங்களை அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரகுநாத் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்க உள்ளாராம்.
இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் வில்லனாக தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி வில்லனாக அறிமுகம் ஆக உள்ளார். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.