விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் யாஷிகா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பரபலமானார்.
இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக கடைமயை செய் என்ற படத்தில் நடித்து வந்தார். இதற்க்கிடையில், கடந்த கடந்த ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடுப்பு எலும்பு, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நடிகை யாஷிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் யாஷிகாவின் அம்மா, மற்றும் அவரது செல்லப்பிராணி இடம்பெற்றுள்ளனர். அதில் ” என்னுடைய வலிமை” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நலமா,சீக்கிரம் நலம் பெற்று வாங்க,உங்க ரசிகர்கள் நாங்கள் உங்களை வெண்திரையில் காண காத்திருக்கின்றோம், பிரார்த்தனைகளுடன் என கூறிவருகிறார்கள்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…