விரைவில் திருமணம்.!? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

Default Image

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் “துருவங்கள் பதினாறு” படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பரபலமானார்.

yashika

யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ளார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்ககூடிய நடிகை. தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இது செட்டில் ஆவதற்கான நேரம். எனக்கு சினிமா பிடிக்கும். என்ன நடந்தாலும், நான் தொடர்ந்து உங்களை மகிழ்விக்கப் போகிறேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது. உங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். மேலும் இன்று ஏப்ரல் 1 முட்டாள்கால் தினம் என்பதால், ரசிகர்களை ஏமாற்றுவதற்காக கூட சொல்லிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்