மிடுக்காக மிரட்டும் யமஹா ஆர் 15 வி 3.0….!!!! சகல வசதிகளுடன் சந்தையில் இறங்குகிறது இளைஞர்களின் இதயம்…!!!
- இருசக்கர பிரியர்களின் முதன்மையாக இடம் பிடிப்பது யமகா ஆர் 15, இந்த மாடல் வாகனத்தின் புதிய வரவாக ஆர்15 வி 3.0 என்ற புதிய மாடலை யமகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- புதிய வசதிகள் மற்றும் பழைய மாடலை விட மேம்பட்ட தொழில்நுட்பம் என வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த் புதிய மாடல் ஆர் 15 வி 3.0 வாகனமானது, பி எஸ்-6 மாசுகட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வண்டியின் இன்ஜின் பவர் மற்றும் டார்க் திறன்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பி எஸ் -6 இன்ஜின் அதிகபட்சமாக 18.6 பி எச் பி பவரையும்,14.1 எஎன் எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது.
இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளாஸ்டருக்கு பதிலாக முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளாஸ்டரைக்கொண்டுள்ளது. மேலும் இதில்,ஸ்லிப்பர் கிளச்,சைடு ஸ்டாண்டு எடுக்காமல் இருந்தால் இன்ஜீன் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பது இதன் சிறப்பம்சம்.இத்தகைய சிறப்பம்சம் மிகுந்த இந்த வாகனம் ரேசிங் புளூ, தண்டர் கிரே,டார்க்னைட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,46 இலட்சம்.