புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கிய யமஹா R15 V3.0!
பெரும்பாலான இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பது, யமஹா R15 V3.0. தற்பொழுது BS6 புதிய பிஎஸ் 6 என்ஜினுடன் வந்துள்ளது. இந்த வண்டியின் என்ஜினை பொறுத்தளவில், சக்தி வெளியீட்டில் ஓரளவு குறைப்பு உள்ளது. பின்புற ரேடியல் டயர், சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் மற்றும் இரட்டை ஹார்ன் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன. மேலும், ரேஸிங் ப்ளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்னயிட் போன்ற நிறங்களுடன் களமிறங்கியுள்ளது.
யமஹா இந்தியா, இந்த ஆண்டு நவம்பரில் யமஹா FZ, FZS போன்ற வண்டிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது R-15 V3.0ன் பிஎஸ்-6 பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய BS-VI R15 V3.0, 142 கிலோ எடையுடன், ஒரு பக்க-நிலை தடுப்பானைப் பெறுகிறது.
புதிய BS-VI என்ஜினுடன் R15 V3.0, 155 சிசி லீக்குட் குல்டு- போர் ஸ்ட்ரோக் SOHC போர் வாள்வ் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 10,000 ஆர்பிஎம்மில் 18 ஹெச்பி ஆற்றலையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.1 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. முந்தைய மாடல் 10,000 ஆர்பிஎம்மில் 19 ஹெச்பி செய்ததால் R15 சுமார் 1 ஹெச்பி ஆற்றலை இழந்துள்ளது.
பிரேக்கிங்கை பொறுத்தளவில், இந்த பைக் டூயல் சேனல் ABS ப்ரேக்சுடன் வருகிறது. யமஹா பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, இந்த BS-6 அப்டேட்டில் வந்துள்ளது. இதற்க்கு முந்தைய மாடலில் சிங்கள் சேனல் ABS பிரேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது கூறிப்பிடத்தக்கது.
BS-6 யமஹா R15 விலைப் பட்டியல் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி):
ரேசிங் ப்ளூ – ரூ .145,900.
தண்டர் கிரே – ரூ .145,300.
டார்க்நைட் – ரூ .147,300.