யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
புதிய யமஹா எம்டி-15 பைக்கில் பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, கூடுதலாக ஐஸ் புளூவ் வெர்மில்லியன் என்ற அட்டகாசமான புதிய வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்திலான எம்டி-15 பைக்தான் நேற்று நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த புதிய பிஎஸ் -6 யமஹா எம்டி-15, ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலின் விலை ரூ.4,000 கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…