‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ -கார்த்தியின் சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

கார்த்தியின் சுல்தான் படத்தின் செக்கன்ட் சிங்கிளான ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்ற பாடல் நாளை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது சுல்தான் படத்தின் செக்கன்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.சுல்தான் படத்தின் செக்கன்ட் சிங்கிளான ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்ற பாடலை நாளை இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Here we go… #Sulthan2ndSingle
“Yaaraiyum ivlo azhaga parkala”
from March 5th Friday 7pm.
A Vivek-Mervin Musical @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #சுல்தான் #Sulthan2ndSingleFromMarch5th pic.twitter.com/1ZlwrXfkVu
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 3, 2021