சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், சீனாவில் தனது மி 11 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன், நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து சியோமி, மி 11 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மி 11 ப்ரோ மாடலில் உள்ள அனைத்து அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மி 11, இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.
டிஸ்பிலே மற்றும் பிராஸசர்:
இந்த சியோமி மி 11 ஸ்மார்ட்போன், 6.81-இன்ச் 2K WQHD AMOLED டிஸ்பிளே வசதியுடன் வருகிறது. இது, 1,440×3,200 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. பிரைட்நஸை பொறுத்தளவில், இதில் 1500 nits வசதியுடனும், 120Hz refresh rate உள்ளிட்ட ஒரு சிறப்பான டிஸ்பிளேயுடன் வருகிறது. இடிஹல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி ஆக்டோ-கோர் சிப்செட் வசதியுடன் வருகிறது. இதனால் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இது சிறிதும் லேக் இல்லாமல் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கேமரா:
கேமராவை பொறுத்தளவில், பின்புறத்தில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் + 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இதில் HDR10+ சப்போர்ட், Motion Estimation, Motion Compensation உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. செல்பி கேமராவை பொறுத்தளவில், 20 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
பேட்டரி:
பேட்டரியை பொறுத்தளவில் இதில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. மேலும், 50W வயர்லஸ் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது. இதில் சார்ஜர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதர அம்சங்கள்:
இந்த மி 11, 5 ஜி ஆதரவுடன் வருகிறது. வைஃபை 6 இ, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், NFC, யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதி வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10-ல் MIUI 12.5 os-வுடன் வருகிறது.
ரேம் மற்றும் விலை:
சியோமி மி 11 8GB +128GB: CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ. 45,000)
சியோமி மி 11 8GB + 256GB: CNY 4,299 (இந்திய மதிப்பில் ரூ. 48,300)
சியோமி மி 11 12GB + 256GB: CNY 4,699 (இந்திய மதிப்பில் ரூ. 52,800)
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…