சீனா அதிபராக சி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் நீடிப்பார்!நிறைவேறியது சட்டம்…..
சீன நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா சி ஜின்பிங் அவரது வாழ்நாள் முழுமைக்கும் சீன அதிபராக நீடிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிபர் பதவியில் ஒருவரே இருமுறைக்கு மேல் இருக்க முடியாது என்கிற வரம்பை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக இரண்டாயிரத்து 958வாக்குகளும் எதிராக இரண்டுவாக்குகளும் பதிவாகின. இதையடுத்து சி ஜின்பிங் தனது இரண்டாவது பதவிக்காலமான 2023ஆம் ஆண்டுக்குப் பிறகும் தனது வாழ்நாள் வரைக்கும் அதிபராகத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழல் தடுப்புக்கான தேசிய மேற்பார்வை ஆணையம் என்கிற அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.