X (டிவிட்டர்) சமூக வலைதளம் முடக்கம்.! பயனர்கள் பாதிப்பு.!
உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது.
பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிப்பு சரிசெய்யப்பட்டு பின்னர் மீண்டும் பழையபடி எக்ஸ் (டிவிட்டர் ) சமூக வலைதளம் இயங்கி வருகிறது.
சமூக ஊடக தளமான X போல, X Pro மற்றும் tweetdeck தளமும் முடங்கியது. X இல் பயனர்கள் உள்ளே சென்றவுடன் முகப்பு பக்கத்தில் welcome to X “எக்ஸ்க்கு வரவேற்கிறோம்!” என்று மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டவுன்டெக்டர் நிறுவன தரவுகளின்படி, 47,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க பயனர்கள் X மற்றும் X Pro பக்கத்தில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.