கொரோனா வைரஸ்க்கு பதில் வூகான் வைரஸ் – அமெரிக்கா திட்டம்!
சீனாவில் உருவாகி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரக்கூடிய மிகக்கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இதனால் சீனாவைவிட இத்தாலி அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இடங்களில் அதிக அளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவை விட்டு வைக்காமல் இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான 50 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் சீனாதான் கொடுத்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியா ஆகியோர் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வூகான் வைரஸ் என்ற சொல் அகராதியில் இருந்து மறைந்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தேவை என்பதால், சீனாவை குறிவைத்து பேசப்பட்ட கொரோனா வைரஸ் என்ற சொல்லை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வூகான் வைரஸ் என்று அடைமொழி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.