வாழ்க்கையில் ஒரே நேரத்தில் 4, 5 காதல் வந்தால் தான் தப்பு – டிடி..!!

Default Image

2வது திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பதிலளித்துள்ளார். 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்குவார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் டிடியின் இரண்டாவது காதல் குறித்து கேட்டதற்கு அவர் வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். இதில் ” வாழ்க்கையில் முதல் காதல், இரண்டாவது காதல் என்று எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் நான்கு ஐந்து பேரை காதலித்தால் தான் தப்பு . ஆனால் வாழ்க்கையில் 1, 2 காதல் வருவது தவறில்லை ‘ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்