விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நாசா தனது ஜேம்ஸ் வெப் என்ற புதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுத்த பிரபஞ்சத்தின் படங்களில் முதல் வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்டார்.மேலும்,”வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது” என்று பைடன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில்,இதுவரை கைப்பற்றப்படாத பிரபஞ்சத்தின் மிக ஆழமான முதல் வண்ணப் புகைப்படக் காட்சியை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வழங்கியுள்ளது.நாசாவின் கூற்றுப்படி,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் இந்த முதல் வண்ணப் புகைப் படம் இன்று வரை தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு படமாகும். ‘வெப்ஸ் ஃபர்ஸ்ட் டீப் ஃபீல்ட் என்று அழைக்கப்படும்,இந்த கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 இன் புகைப்படம் இதுவரை கிடைத்திடாத பல்வேறு விவரங்களுடன் நிரம்பி வழிகிறது.
அந்த வகையில் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள்,அகச்சிவப்புக் கதிர்களில் இதுவரை காணப்படாத பொருள்கள் ஆகியவை முதல் முறையாக விண்வெளி தொலைநோக்கியால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில வியக்கவைக்கும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.இவை தற்போது நாசாவின் இணையதள பக்கத்தில் கிடைக்கின்றன.
ஸ்டிபன் குயின்டெட்:
இதில் மிக அருகருகே ஒன்றாக உள்ள 5 பிரபஞ்சங்களின் தொகுப்புதான் ஸ்டிபன் குயின்டெட்.இதில் 4 பிரபஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளது தெரிகிறது.
தெற்கு ரிங்:
நாசா வெளியிட்டுள்ள இப்படம் தூசுகள்,ரசாயனம் கொண்ட புகை மூட்டதிற்கு இடையில் விண்மீன் இருப்பதைக் காட்டுகிறது.இந்த புகைப்படம் விண்மீனின் இறப்பைக் குறிக்கும் வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
WASP-96b
மேலும்,நாசா வெளியிட்டுள்ள WASP-96b எனப்படும் டேட்டா புகைப்படம் ஒரு அலைவரிசை புகைப்படம்.WASP-96b ஆனது பூமியில் இருந்து 1150 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
கரினா நெபுலா:
நாசாவால் வெளியிடப்பட்ட கடைசி மற்றும் இறுதிப் படம்,கரினா நெபுலாவில் NGC 3324 எனப்படும் நட்சத்திரம் உருவாகும் பகுதியைக் காட்டுகிறது.மேலும் அதன் “மலைகள்” மற்றும் “பள்ளத்தாக்குகள்” மின்னும் நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது.அதே சமயம்,அகச்சிவப்பு நிறத்தில் பிடிக்கப்பட்ட இந்த புதிய படம் நட்சத்திரப் பிறப்பிற்கு முன்னர் உள்ள கண்ணுக்கு தெரியாத வியத்தகு பகுதிகளைக் காட்டுகிறது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…