உடல் எடையை குறைக்கணும்னு ஆசை படுறீங்களா…? அப்ப இந்த ஜூஸ் குடிங்க…!!!
இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய தலையிடியே இந்த உடல் எடை தான். இந்த உடல் எடையை குறைப்பதற்கு நாம் பல வழிகளில் முயன்று பல மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால் உடல் எடை குறைவதில்லை. அதற்க்கு மாறாக பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசை போடுகிறவர்கள் இந்த ஜூஸை தயாரித்து குடித்து பாருங்கள். அதிசீக்கிரத்தில் மாற்றத்தை காணலாம். இந்த ஜூஸை இவாறு தயாரிப்பது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- பீட்ருட் – பாதியளவு
- புதினா – சிறிதளவு
- கேரட் – 1
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
செய்முறை :
கேரட் மற்றும் பீட்ருட்டை தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். புதினா இலையை நீரில் கழுவி வைத்து கொள்ள வேண்டும். முதலில் கேரட், புதினா பீட்ருட் மூன்றையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் சிறுது நீர் சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை வடிகட்டி கொண்டு வடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் தொடர்ந்து இந்த ஜூஸை குடித்து வந்தால் ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைவதை உங்கள் கண்கூடாக காணலாம்.