பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த கருத்து இந்திய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் ட்ரம்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்.பிரதமர் மோடி விரும்பினால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் மிகவும் நல்லவர்கள் என்று தெரிவித்தார்.