வார இறுதி வசூலில் உலகளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர்!
வார இறுதி நாட்களாகிய ஜனவரி 15 முதல் 17 வரையிலான நாட்களில் மட்டும் மாஸ்டர் படம் உலகளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் சில எதிர்மறையான கருத்துக்களை பெற்று வந்தாலும் வசூலில் பெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. ரசிகர்களும் பொதுமக்கள் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாரத்தின் இறுதி நாட்களாகிய ஜனவரி 15 முதல் 17 வரையிலான நாட்களில் உலகளவில் கணக்கிடுகையில் மாஸ்டர் படம் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாம். வார இறுதி நாட்களில் மட்டும் 23 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலாக மாஸ்டர் படம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவதாக எ லிட்டில் ரெட் பிளவர் எனும் எனும் படம் 11.75 யுஎஸ் டாலர் வசூல் பெற்று உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.