உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது.!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசால் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,000-ஐ எட்டியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,732 ஆக உயர்ந்து, 1,51,831 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1071 பேர் பாதிக்கப்பட்டு, 29 பேர் பலியாகியுள்னனர். இதையடுத்து உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், இத்தாலியில் 10,779 பேர் பலியாகி, 97,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,030 பேர் குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் 6,803 பேர் உயிரிழப்பு, 80,110 பேர் பாதிப்பு, 14,709 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் 3,304 பேர் பலி, 81,470 பேர் பாதிப்பு, 75,700 பேர் குணமடைந்துள்ளனர். ஈரானில் 2,640 பேர் உயிரிழப்பு, 38,309 பேர் பாதிப்பு, 12,391 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். பிரான்ஸ் 2,606 பேர் பலி, 40,174 பேர் பாதிப்பு, 7,202 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 2,485 பேர் பலி, 1,42,637 பேர் பாதிப்பு இதுதான் தற்போது உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு, 4,559 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025