உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் சேவை ..!மீண்டும் இயங்கத் தொடங்கியது…!
யூடியூப் தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இன்று உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்குள்ளாகினார்கள்.சர்வர் (SERVER)என்ற தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதாக டுவிட்டரில் அதன் பயனாளர்கள் அதிக அளவில் பதிவிட்டனர். இதனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூப்டவுன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில் தற்போது யூடியூப் தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.