உலகளவில் கொரோனா பாதிப்பு 12,74,346 ஆகவும், உயிரிழப்பு 69,480 ஆகவும் அதிகரிப்பு.!
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர். மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து, உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,74,346 ஆகவும், உயிரிழப்பு 69,485 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோன பாதிக்கப்பட்டவர்களில் 2,64,838 பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா பாதிப்பிற்கு அமெரிக்காவில் 3,36,830 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு 9,618 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து ஸ்பெயினில் 1,31,646 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,948 ஆகவும், பலி எண்ணிக்கை 15,887 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுதான் உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நாடு என்பதாகும்.