உலகளவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியது.! பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.!

Default Image

உலகளவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டி, உயிரிழப்பின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொடூர வைரஸை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உலகளவில் கொரோனா பாதிப்பு 17,00,378 ஆக உயந்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 102,755 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வைரசால் பாதிக்கப்பட்ட 3,76,548 பேர் குணமடைந்துள்ளார்கள். 

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் 502,876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18,747 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 158,273 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 16,081 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனா பாதிப்பு 147,577 ஆகவும், பலி எண்ணிக்கை 18,849 ஆகவும் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரான்சில் கொரோனா பாதிப்பு 124,869 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 13,197 ஆகவும் உள்ளது. மேலும் ஜெர்மனியில் கொரோனாவால் 122,171 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2,736 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை 81,953 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 3,339 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என்றும் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்