உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39,17,627 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூரமான வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39,17,627 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 2,70,720 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 13,44,164 பேர் குணமடைந்து உள்ளார்கள். கொரோனா வார்டில் தற்போது வரை 23,02,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 48,958 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டதில் அமெரிக்காதான் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு கொரோனாவால் 12,92,623 பேர் பாதிக்கப்பட்டு, 76,928 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 2,56,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை அங்கு 26,070 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வந்த இத்தாலி நாட்டில் தற்போது வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. அங்கு, 2,15,858 பேர் பாதிக்கப்பட்டு, 29,958 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தாக்கத்தின் குறைவால் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…