கொரோனாவால் உலகம் முழுவதும் 27,90,986 பேர் பாதிப்பு, 1,95,920 பேர் உயிரிழப்பு

Default Image

உலகம் முழுவதும் கொரோனாவால் 27,90,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 27,90,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,81,382 பேர் குணமடைந்துள்ளனர்.1,95,920 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 9,22,825 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,234 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,19,764  பேர் பாதிக்கப்பட்டு, 22,524 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 1,92,994 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 25,969 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்