உலகம் முழுவதும் 27,04,676 பேர் கொரோனாவால் பாதிப்பு,1,90,549 பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 27,04,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,38,032 பேர் குணமடைந்துள்ளனர்.1,90,549 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 8,87,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.50,177 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,13,024 பேர் பாதிக்கப்பட்டு, 22,157 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 1,89,973 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.25,549 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.