பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் தனது 16 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற சன்னா மரின் , டிசம்பர் 8 ம் தேதி முதல் பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பெண் பிரதமர்கள் ஆளும் நாடுகளின் பட்டியலில் சிறப்பாக கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதில் சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தனது 16 ஆண்டு கால காதலரை மணமுடித்துள்ளார்.
பின்லாந்து நாட்டின் பிரதமருக்கான உத்தியயோகப்பூர்வ இல்லத்தில் காதல் கணவரான மார்கஸ் ரெய்கோனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பின்லாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே இரண்டரை வயதில் எம்மா அமலியா மரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இதனை சன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…