புற்று நோயில் இருந்து மீண்ட பெண் இடைவிடாது ஆங்கில கால்வாயை 4 முறை கடந்து உலக சாதனை !
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் சாரா.37 வயதாகும் இவர் சென்ற ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்க பட்ட அவர் சென்ற ஆண்டு அதில் இருந்து மீண்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு திறந்த நீர் விளையாட்டில் பங்கு பெற்ற சாரா தாமஸ் ஆங்கில கால்வாயை முதல் முறையாக 2012 ஆம் ஆண்டும் பிறகு 2016 யிலும் கடந்தார்.
இந்நிலையில் அமெரிக்க -கனடாவிற்கு இடையில் சாம்ப்லைன் எனும் ஏரியை 104.6 மைல் தூரம் நீந்திய பிறகு தான் சாராவிற்கு புற்று நோய் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.
இந்நிலையில் சாரா தீவிர சிகிக்சை எடுத்து கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்று நோய் சிகிச்சையில் இருந்து மீண்டார். மேலும் இங்கிலாந்தையும் பிரான்சையும் பிரிக்கும் இங்கிலா கால்வாயின் இரண்டு முனைகளையும் 54 மணிநேரத்திற்குள் இரண்டு முறை கடந்து சாதனை படைத்துள்ளார்.மேலும் இந்த சாதனையை “மார்பக புற்று நோயால் பாதிக்க பட்டு போராடி வரும் அனைத்து பெண்களுக்கும்” சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.